செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
கல்வி

கனவை நனவாக்கும் கல்விக்கடன்... கை கொடுக்கும் வங்கிகள்

Jul 20, 2020 08:31:20 PM

ஏழை - எளிய மாணவர்களின் கல்விக் கனவை நனவாக்க , வங்கிகளின் கல்விக்கடன், கை கொடுக்கிறது.  உயர் கல்வி மாணவர் சேர்க்கை துவங்கியுள்ள சூழலில், கல்விக்கடனை எளிதில் பெறுவது எப்படி? என்பது குறித்து அலசுகிறது, இந்த சிறப்புச் செய்தித்தொகுப்பு

பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் உயர் கல்விக்கான வாய்ப்புகளும், வசதிகளும் குவிந்து கிடந்த போதிலும், கல்விக்கட்டணங்கள் ஏழை - எளிய மாணவர்களை மலைக்க வைக்கிறது.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக முடங்கியுள்ள நிலையில், பெரும்பாலான பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் உயர்கல்வி கனவை நனவாக்க வங்கிக்கடனையே நம்பியுள்ளனர்.

திறமையிருந்தும் மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அரசு கல்விக் கடன்களை வழங்கி வருகிறது. குடும்பத்தில் உள்ள எந்த கடனும் கல்விக்கடனை பாதிக்காது. யுஜிசி அங்கீகாரம் பெற்ற அனைத்து படிப்புகளுக்கும் கல்விக் கடன் வழங்கப்படும்.

4 லட்சம் ரூபாய் வரை, 4 லட்சம் ரூபாய் முதல் ஏழரை லட்சம் ரூபாய் வரை, ஏழரை லட்சம் ரூபாய்க்கு மேல் என 3 வகைகளில் கடன் தொகை வழங்கப்படும். ஏழரை லட்சம் ரூபாய் வரை கடன் தொகை பெற அடமானம் ஏதும் தேவையில்லை.

கல்வி கடன் பெற்றவர்கள் படிக்கும் காலத்திலும், படித்து முடித்த பிறகு ஓராண்டு காலத்திற்கும் வட்டி தொகை செலுத்த வேண்டிய அவசியமில்லை. மானியத் தொகையாக வட்டியை மாநில அரசே செலுத்தி விடும்.

வேலை கிடைத்த பின்னர், கடன் தொகையை தவணை முறையில் செலுத்தலாம். ஏழரை லட்சம் ரூபாய் வரையிலான கடன் தொகையை 4 முதல் 10 ஆண்டுகளில் திருப்பி செலுத்தலாம். ஏழரை லட்சம் ரூபாய்க்கு மேல் பெறும் கடன் தொகையை 15 ஆண்டுகள் வரை செலுத்த அனுமதிக்கப்படும்.

விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் கல்விக்கடன்அளிக்க வேண்டும் அல்லது நிராகரிப்புக்கு உரிய பதிலை தெரிவிக்க வேண்டும் . சரியான பதில் கிடைக்காவிட்டால், மத்திய அரசின்  https://pgportal.gov.in/ என்ற இணையதளத்தில் புகார்களை தெரிவிக்க வசதி செய்யப்பட்டு உள்ளது,


Advertisement
2024-25ஆம் கல்வியாண்டுக்கான 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு
குரூப் - 4 பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
கல்வி, ஒழுக்கத்தில் சிறந்து விளங்கிய மாணவி.. ஒரு நாள் தலைமை ஆசிரியராக நியமித்து கௌரவம்..!
வகுப்புகளுக்கு மாணவர்கள் வராமல் தேர்வெழுத அனுமதிப்பதாக புகார்.. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எச்சரிக்கை..!
மரத்தடியில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள்.. மழைக்காலத்தில் என்ன செய்யவார்கள்..? பெற்றோர்கள் வேதனை
அதிக அளவில் பெண்கள் உயர் கல்வி படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களுக்கு குறைந்த வட்டியில் கல்விக்கடன் வழங்கப்படும்
எல்.எல்.எம். முதுகலை சட்டப்படிப்பிற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு
தமிழகம் முழுவதும் நாளை நடைபெறுகிறது குரூப்-1 முதல் நிலை தேர்வு
கல்விக் கொள்கை குறித்த 600 பக்க அறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிப்பு...
நடிகை தமன்னா குறித்து 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டம்.. எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள்

Advertisement
Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,Big Stories,

தேனீக்கள் வளர்ப்பது இவ்வளவு சுலபமா..? மாதம் ரூ.50 ஆயிரம் லாபம்..! ஒரு நாள் பயிற்சி தர்ராங்க..

Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கை கொடுக்கும் காளான் வளர்ப்பு.. வாய்ப்பை வழங்கும் வேளாண் பல்கலை..

Posted Nov 05, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

50 கிராம் நகைக்காக மூதாட்டியை கொன்று டிராலியில் அடைத்த குடும்பம்..! நெல்லூர் டூ மீஞ்சூர் ரெயில் திகில்..

Posted Nov 05, 2024 in Big Stories,

மாடியில தொட்டிக் கட்டி“காய்கறி தோட்டம் ”நகரத்து பெண் விவசாயி..! வாங்க நாமும் தோட்டம் அமைக்கலாம்

Posted Nov 05, 2024 in உலகம்,Big Stories,

தேர்தலுக்கு தயாராகும் அமெரிக்கா! உலகின் வித்தியாசமான தேர்தல் முறை அதிபர் தேர்வு நடப்பது எப்படி?


Advertisement