கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் இறுதி பருவ தேர்வுகளை ரத்து செய்து, அனைவருக்கும் தேர்ச்சி வழங்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இறுதி பருவ தேர்வுகளை கட்டாயம் நடத்தவேண்டும் எனக்கூறி அதற்கான அனுமதியை மத்திய அரசிடம் இருந்து உயர்கல்வித்துறை பெற்றிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். எல்லாவற்றுக்கும் மேலாக 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இறுதி பருவ தேர்வுகளை மட்டும் நடத்தியே தீரப்போவதாக புதிய நிலைப்பாடு எடுப்பது எவ்வகையில் நியாயம் என அன்புமணி கேள்வி யெழுப்பியுள்ளார்.
கொரோனா அச்சம் காரணமாக 7 மாநிலங்களில் இறுதியாண்டு பருவ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அன்புமணி ராமதாஸ், எத்தனை கோணத்தில் ஆய்வு செய்தாலும், தேர்வை விட மாணவர்களின் உயிர் தான் முக்கியமாகும் எனவும் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.