நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் கலந்து கொள்வது குறித்து முதலமைச்சர், கல்வியாளர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் கூட்டுறவு வங்கியின் மூலம், ஒரு கோடியே 13 லட்சம் செலவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இ-பாக்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் மாணவர்களுக்கு ஆன்லைனில் நீட் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக கூறினார்.
தற்போது உள்ள சூழ்நிலையில் கூடுதலாக 7 ஆயிரத்து 200 பள்ளி ஆசிரியர்கள் உள்ளனர் என்றும், 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி வழங்குவது குறித்து ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.