பாடநூல்களை பாதுகாப்பற்ற முறையில் விநியோகிக்கக் கூடாது என்று கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 3 கோடி விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாடநூல்களை தனியார் லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்களில் பாதுகாப்பாக ஏற்றி பள்ளிகளுக்கு வழங்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது.
இதை மீறி, சொந்த வாகனங்களில் பாடப்புத்தகங்களை கொண்டு செல்லக் கூடாது என்றும், உரிய விதிமுறைகளைப் பின்பற்றி கல்வி அலுவலர்கள் முன்னிலையிலேயே பாடப் புத்தகங்களை எடுத்து செல்ல வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மீறும் தலைமை ஆசிரியர்கள், அவர்களை கண்காணிக்கத் தவறும் கல்வி அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.