தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கு 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்கள் இம்மாத இறுதிக்குள் அனுப்பி வைக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிச் செட்டிப்பாளையத்தில் போட்டோ, வீடியோ ஒளிப்பதிவாளர்கள், சவர மற்றும் சலவை தொழிலாளர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அமைச்சர் செங்கோட்டையன் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாணவர்கள் முக்கிய பாடங்களை மட்டும் படிக்க ஏதுவாக பாடத்திட்டத்தில் சில பக்கங்களை குறைக்க 18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.