திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஜூலை 1-ம் தேதி தொடங்கவிருந்த ஆன்லைன் பருவ தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 21-ம் தேதி முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், நாடு முழுவதுமுள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு ஜூலை 1-ம் தேதி முதல் ஜூலை 15-ம் தேதி வரை ஆன்லைனில் தேர்வு நடத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.
இதனிடையே கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, ஜூலை 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடக்கவிருந்த இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கான ஆன்லைன் தேர்வுகளை மத்திய தேர்வு கட்டுபாட்டுதுறை ரத்து செய்துள்ளதாக திருவாரூர் மத்தியபல்கலைகழக நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், முந்தைய பருவதேர்வு மதிப்பெண், வருகை பதிவேடுகளின் படி சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.