10 மற்றும் 11-ம் வகுப்புக்கான மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணி 29-ம் தேதி தொடங்கும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதேபோல் 11ம் வகுப்புக்கு விடுபட்ட தேர்வும் ரத்து செய்யப்பட்டது. அந்தத் தேர்வுகளுக்கு, மாணவர்களின் முந்தைய செயல்பாடு அடிப்படையில் மதிப்பெண் அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தேர்வுத்துறை இயக்குநர் பழனிசாமி அனுப்பியுள்ள உத்தரவில், 29ம் தேதி முதல் ஜூலை 8-ம் தேதி வரை இணையதளத்தில் மதிப்பெண்களை பதிவேற்ற வேண்டும் எனவும், இப்பணியின்போது, தேர்வுத்துறை இயக்குநரின் உத்தரவின்றி யாரும் அறையை விட்டு வெளியேறக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.