11-ம் வகுப்பில் புதிய பாடத்தொகுப்புக்கு உரிய அனுமதியைப் பெறாமல் மாணவர் சேர்க்கையை நடத்தக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான பள்ளிகள் 11-ம் வகுப்பில் உரிய அனுமதி இல்லாமலேயே மாணவர் சேர்க்கையை நடத்தி வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.
11-ம் வகுப்பில் 600 மதிப்பெண்கள் கொண்ட தொகுப்பு பழைய பாடத்தொகுப்பு ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிலையில், 500 மதிப்பெண்கள் கொண்ட புதிய பாடத் தொகுப்பு நடப்பு கல்வி ஆண்டில் அமலுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் அனுமதி பெறாமல் எந்த மேல்நிலைப் பள்ளிகளும், 500 மதிப்பெண் தொகுப்பின் கீழ் புதிதாக மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளக் கூடாது என்றும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.