10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள், வருகைப் பதிவேடு உள்ளிட்ட விவரங்களை அனைத்து பள்ளிகளும் தயார் நிலையில் வைத்திருக்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தாக்கம் அதிகரிப்பால் 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பில் விடுபட்ட பாடங்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்த தமிழக அரசு, காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் வருகைப்பதிவு அடிப்படையில் மதிப்பெண்களை வழங்க உத்தரவிட்டது.
இதற்காக அனைத்து தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளியில் 10 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களை வரவழைத்து, 2019-20ம் கல்வியாண்டின் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண், விடைத்தாள்கள் மற்றும் வருகைப் பதிவேடை தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் இருந்து கேட்கும் போது தலைமை ஆசிரியர்கள் உடனடியாக விவரங்களை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.