காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது, தனித்தேர்வர்கள் தேர்ச்சி ஆகியவை குறித்து முதலமைச்சர் தலைமையிலான ஆய்வுக்குழு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் வ.உ.சி. பூங்கா பகுதியில் மாநகராட்சி சார்பில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காய்கறி மற்றும் பழ மார்க்கெட்டை அமைச்சர் செங்கோட்டையன் திறந்துவைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொத்துத்தேர்வை ரத்து செய்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டதின் மூலம் எதிர்மறையான விமர்சனங்கள், கருத்துக்களை தோற்கடித்திருப்பதாக குறிப்பிட்டார்.