ஊரடங்கு காரணமாக தேர்வெழுத இயலாத எம்.பில் மற்றும் பி.ஹெச்.டி (M.Phil., Ph.D.) ஆராய்ச்சி மாணவர்களுக்கு மேலும் ஓராண்டு காலம் அவகாசம் வழங்கி உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து கல்லூரி முதல்வர்கள் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு உயர் கல்வித்துறை செயலாளர் அபூர்வா கடிதம் எழுதியுள்ளார். அதில், ஊரடங்கு காரணமாக கல்வி நிறுவனங்கள் திறக்கப்படாத நிலையில், 2019 - 2020 கல்வி ஆண்டுடன் நிறைவு பெறும் எம்.பில்., பி.எச்.டி. மாணவர்கள் தங்கள் ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பிக்கவும், தேர்வு எழுத வசதியாகவும் மேலும் ஒராண்டு நீட்டிப்பு செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்த மாணவர்களுக்கு Viva - Voce எனப்படும் வாய்மொழி தேர்வை காணொலிக் வாயிலாக மட்டுமே நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மறு உத்தரவு வரும் வரை கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.