சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுக்கான கால அட்டவணை திங்களன்று அறிவிக்கப்பட உள்ளது.
குடியுரிமைச் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தின்போது வன்முறை பாதித்த வடகிழக்கு டெல்லியில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தேர்வுகள் நடத்தப்படவில்லை. அதேபோல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் 12ஆம் வகுப்பில் 12 பாடங்களுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.
இந்தத் தேர்வுகள் ஜூலை ஒன்றாம் தேதியில் இருந்து 15ஆம் தேதிக்குள் நடத்தப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது.
தேர்வுக்கான கால அட்டவணை சனிக்கிழமை மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் முதலில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தேர்வுக்கான கால அட்டவணை திங்களன்று வெளியிடப்படும் என அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.