கொரோனா ஊரடங்கை பயனுள்ளதாக்கும் வகையில் இந்தியாவிலேயே முதல் முறையாக திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடைபெறுகிறது.
ஊரடங்கு தொடங்கியது முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் தேர்வுகளோ அடுத்த கட்ட பாடங்களோ நடத்தப்படவில்லை. இந்நிலையில் விடுப்பில் வீடுகளில் இருக்கும் மாணவர்களுக்கு பாடத் தொடர்பு மறந்து விடாமல் இருக்க 6 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிப் பாடங்களில் இருந்து கடந்த மாதம் நடைபெற்ற முதல் கட்டத் தேர்வில் 21047 பேர் பங்கேற்றனர்.
இதில் 75 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்ற 3029 பேர் நேரடியாக 3-ஆம் கட்ட மற்றும் இறுதி தேர்வுக்கு தகுதி பெற்றனர்.
அதற்கு குறைவாக மதிப்பெண் பெற்றவர்கள் இன்று நடைபெறும் 2-ஆம் கட்ட ஆன்லைன் தேர்வை பள்ளிகள், வீடுகள் உள்ளிட்ட இடங்களில் இருந்து கணினிகள், மடிக்கணினிகள் மூலம் எழுதினர். இறுதிக்கட்டத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்