உயர்மட்டக் குழு கூட்டத்தற்கு பின் ஜூன் மாத இறுதிக்குப் பிறகு 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணையை அறிவிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு உறுதியாக நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ஈரோடு மாவட்டம், கோபி செட்டிபாளையத்தில், கைத்தறி நெசவாளர்களுக்கு நிவாராண பொருட்களை வழங்கிய பின் பேசிய அவர், கொரோனாவின் தாக்கத்தை பொறுத்து பள்ளிகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.