கொரோனா மற்றும் ஊரடங்கு எதிரொலியாக மே மாதம் 31 ஆம் தேதி நடக்கவிருந்த சிவில் சர்வீசஸ் முதற்கட்ட தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
புதிய தேதி குறித்த விவரங்கள் வரும் 20 ஆம் தேதி வெளியிடப்படும் என யுபிஎஸ்சி அறிவித்துள்ளது. எஞ்சினியரிங் சர்வீசஸ், ஜியாலஜிஸ்ட் முதன்மைத் தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் பல்வேறு பதவிகளுக்கு நடத்த இருந்த தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று இந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்படும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடந்த வாரமே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.