கோவிட் 19க்கு எதிராக அதிவிரைவுச் செயலி மற்றும் இணையத்தளங்களை உருவாக்க அண்ணா பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்துடன் பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைந்து தேசிய அளவிலான கோவிட் 19 பயோ இன்பார்மேட்டிக்ஸ் ஆன்லைன் ஹேக்கத்தான் ஒன்றை அறிவித்துள்ளன.
ஏப்ரல் 27 முதல் மே 6 வரை இந்த ஆன்லைன் ஹேக்கத்தான் நடைபெற உள்ளது. தகவல் தொழில்நுட்ப மாணவர்களும், அந்தத் துறை சார்ந்த பேராசிரியர்களும் தங்கள் திறமையை நிரூபிக்க இந்த ஹேக்கத்தான் ஒரு வாய்ப்பை ஏற்படுத்துகிறது.
இந்த நிகழ்வில் இந்தியாவில் உள்ள அனைத்துத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களும் பங்கேற்குமாறு ஏஐசிடிஇ அழைப்பு விடுக்கிறது.
வெற்றிபெறும் பங்கேற்பாளர்களின் சாதனைகள் அவர்களது கல்வி நிறுவனங்களின் என்ஏஏசி தரவரிசை உயர்வதற்கும் துணையாக இருக்கும்.
சிறந்த செயலிகள் மற்றும் இணையத்தளங்களை உருவாக்குபவர்களுக்குத் தேசிய அளவிலும் மாநில அளவிலும் பரிசுகள் வழங்கப்படும். அவர்களுக்கு உரிய வேலைவாய்ப்புகளுக்கும் ஒரு வாய்ப்பாக அமையும்.