2019 - 2020 ம் ஆண்டுக்கான 10 - வது வகுப்பு பொதுத்தேர்வு, தமிழகத்தில் நிச்சயம் நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, பள்ளி கல்வித் துறையின் முதன்மை செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தேர்வு, தள்ளி வைக்கப்பட்டுள்ளதே தவிர, ரத்து செய்யப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளார். ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக, தேர்வை எப்போது நடத்துவது ? என்பது குறித்து ஆலோசித்து பின்னர் அறிவிக்கப்படும் என தீரஜ்குமார் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அனைத்து பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங் களுக்கு ஏப்ரல் 30 வரை விடுமுறையை நீட்டித்து, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி உத்தரவிட்டு உள்ளார். எனவே, ஏப்ரல் 30 வரை செமஸ்டர் தேர்வுகளும் நடைபெறாது எனஅறிவிக்கப்பட்டு உள்ளது.