தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் ஏப்ரல் 21 ம் தேதி முதல் கோடை விடுமுறை துவங்கும் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு, தற்போது நடைபெற்று வருகிறது. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான தேர்வுகளும் அடுத்த மாதம் தொடங்கி, ஏப்ரல் 20 ஆம் தேதியோடு நிறைவு பெறும்.
எனவே, ஏப்ரல் 21 ல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை துவங்கும் என்றும் , ஜூன் முதல் வாரத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்என்றும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.