கொரானா வைரஸ் தொடர்பாக மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு, அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் மத்திய மனித வளத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாணவர்களுக்கு அடிக்கடி கைகளை கழுவுதல், இருமல் தும்மல் ஏற்படும்போது கைக்குட்டையை பயன்படுத்துதல், உடல்நிலை சரியில்லாதபோது வகுப்புக்கு வருவதையும், பொதுஇடங்களில் கூடுவதையும் தவிர்ப்பது போன்றவற்றை வலியுறுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மாணவர்களின் குடும்பத்தாரிடம் மட்டுமின்றி அவர்களை சூழ்ந்துள்ள பகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, பெற்றோரின் கோரிக்கையை ஏற்று தேர்வறைக்குள் மாணவர்கள் மாஸ்க் அணிய சிபிஎஸ்இ அனுமதி அளித்துள்ளது.