மாணவர்களுக்கு பள்ளிகளில் உடல் ரீதியான தண்டனைகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித் துறை அறிக்கை அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மேடவாக்கம் அரசு பள்ளியில் 8-ஆம் வகுப்பு மாணவன் கார்த்திக் வீட்டுப் பாடங்களை முடிக்கவில்லை எனக் கூறி ஆசிரியர் இரும்பு ஸ்கேலால் தலையில் தாக்கியதில் நரம்புகள் பாதிக்கப்பட்டு மாணவன் கண் பார்வை இழந்ததாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த வழக்கை தானாக முன்வந்து மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றது. மாணவனை தாக்கிய ஆசிரியர் மீது எடுத்த நடவடிக்கை என்ன? பாதிக்கப்பட்ட மாணவனுக்கு இழப்பீடு பெற்றுக் கொடுக்கப்பட்டதா? என கேள்வி எழுப்பிய நீதிபதி, பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் மற்றும் இயக்குனர் 2 வாரத்தில் அறிக்கை அளிக்க உத்தரவிட்டார்.