நாட்டின் மிகச் சிறந்த 11 பெண் அறிவியலாளர்கள் பெயரில் கல்வி நிறுவனங்களில் இருக்கைகள் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவை இணைந்து 11 பேரைத் தேர்வு செய்துள்ளன.
செல்மரபியல் துறை பேராசிரியை அர்ச்சனா சர்மா, தாவரவியல் நிபுணர் ஜானகி அம்மாள், கரிமவேதியியல் விஞ்ஞானி தர்ஷன் ரங்கநாதம், ரசாயனத் துறை ஆராய்ச்சியாளர் அசிமா சாட்டர்ஜி, மருத்துவர் காதம்பினி கங்குலி, மானுடவியல் நிபுணர் இராவதி கார்வே, வானியல் விஞ்ஞானி அன்னா மணி, பொறியாளர் ராஜேஸ்வரி சாட்டர்ஜி, கணிதவியல் நிபுணர் ராமன் பரிமளா, இயற்பியல் விஞ்ஞானி பிபா சவுத்ரி, உயிரி மருத்துவ ஆய்வாளர் கமல் ரணதிவே ஆகிய 20ம் நூற்றாண்டின் சிறந்த ஆய்வாளர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களின் பெயரில் இந்த இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன.