தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதுவதற்கான நேரம் இரண்டரை மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் முதலிபாளையத்தில் புதிதாக கட்டப்பட்ட அரசு பள்ளி கட்டிடங்களை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 வரை பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவித்தார்.
15 நிமிடம் வினாத்தாளை படிக்கவும் 3 மணி நேரம் தேர்வு எழுதவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டார்.