தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பொதுத் தேர்வெழுதும் தனித்தேர்வர்களுக்கு இந்தாண்டு தனியாக, தேர்வு மையங்கள் அமைக்கப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நடப்பாண்டில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் புதிய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வெழுதவுள்ளனர். அதேசமயம் பழைய பாடத்திட்டத்தின் கீழ் படித்து தோல்வி அடைந்தவர்கள், தனிப்பயிற்சி மையங்களில் பயில்பவர்கள் ஆகியோருக்கான தேர்வுகள், பழைய பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே கேள்வித்தாள்கள் வடிவமைக்கப்பட்டு நடைபெற உள்ளது.
எனவே, குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு, தனியாக தேர்வு மையங்கள் அமைக்கப்படவுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.