மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்ட 55 ஆயிரம் கோடி ரூபாய் கல்வி கடனை தள்ளுபடி செய்யக்கோரிய வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தொழிலதிபர்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து வரவேண்டிய சுமார் 16 லட்சம் கோடி ரூபாய் நிலுவைத்தொகையை வசூலிப்பதில், அரசியல் மற்றும் அதிகாரம் காரணமாக வங்கி நிர்வாகங்கள் அக்கறை செலுத்துவதில்லை என கூறப்பட்டிருந்தது.
ஆனால், மாணவர்களிடம் கல்வி கடனை வசூல் செய்வதில் மட்டும், விதிமுறைகளை மீறி வங்கி நிர்வாகங்கள் கடுமையாக செயல்பட்டு வருகின்றன என புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிமன்றம் எதன் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டது என கேள்வி எழுப்பி வழக்கை தள்ளுபடி செய்ததோடு, நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாகக் கூறி மனுதாரருக்கு ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் விதித்தது.