குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் சைபர் க்ரைம் குறித்த விழிப்புணர்வை பள்ளிகள் மூலம் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஏ.டி.ஜி.பி. ரவி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இது தொடர்பாக தலைமையாசிரியர்களுக்கான பயிலரங்கை தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார். போக்சோ வழக்குகளில் விரைந்து விசாரணையை முடித்து தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக போக்சோ குறித்த ஏ.டி.ஜி.பி. ரவியின் கேள்விக்கு ஆசிரியர்களால் விளக்கம் அளிக்க முடியாத நிலையில் அவர் தாமாகவே விளக்கம் அளித்தார். ஆசிரியர்களுக்கு ஜஸ்ட் பாஸ் மட்டுமே அளிப்பதாக அவர் கூறியதையடுத்து சிரிப்பலை ஏற்பட்டது.