தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சுகாதாரத்துறை, உயர்கல்வித்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 தளங்களை கொண்ட மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மைய கட்டிடத்தையும், மேலும் பல்வேறு மாவட்டங்களில் 19 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.
அதே போல் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 7 கோடியே 97 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர், பல்வேறு மாவட்டங்களில் 83 கோடியே 94 லட்சம் மதிப்பீட்டில் உயர்கல்வித்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் திறந்துவைத்தார்.