குரூப்4 மற்றும் குரூப்2 தேர்வு முறைகேடு குறித்து தீவிர விசாரணை நடைபெறும் நிலையில், குரூப் -1 தேர்வு முறைகேடு குறித்த வழக்குகள் பிப்ரவரி 12 ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2015-2016 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் -1 தேர்வில் விடைத்தாள் முறைகேடு தொடர்பான வழக்குகளை மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், அறிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியிருந்தது.
நிலுவையில் உள்ள அந்த வழக்குகளை விரைந்து விசாரணைக்கு எடுக்க வேண்டுமென, மனுதாரரான திருநங்கை ஸ்வப்னா தரப்பு வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.
அவரது முறையீட்டை ஏற்ற நீதிபதிகள் ஆர். சுப்பையா மற்றும் ஆர். பொங்கியப்பன் அடங்கிய அமர்வு, அந்த வழக்குகளை பிப்ரவரி 12 ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர்.