சென்னை அருகே இறைச்சி கழிவுகள் முறையாக திடக்கழிவு மேலாண்மைக்கு உட்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
பம்மல் நகராட்சியில் பிரதான சாலையில், இறைச்சி மற்றும் தோல் கழிவுகள் கொட்டப்படுவது தொடர்பான வழக்கு, தென்மண்டல பசுமைத் தீர்ப்பாய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த அறிக்கையில், இறைச்சி கழிவுகளை திடக்கழிவு மேலாண்மைக்கு உட்படுத்த கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், அபராதம் விதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இறைச்சி கழிவுகள் திடக்கழிவு மேலாண்மைக்கு உட்படுத்தப்படுகிறதா என்பதை நேரில் ஆய்வு செய்து பிப்ரவரி மாதம் 28 ம் தேதிக்குள் குழுவின் கூட்டறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.