பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு பிப்ரவரி 3 ஆம் தேதி சென்னையில் திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாவட்ட திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் காலை 7 மணியளவில் அண்ணா நினைவிடத்தில் திமுகவினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பொருட்டு வாலாஜா சாலையில் இருந்து புறப்படும் அமைதி பேரணி, அண்ணா சதுக்கத்தை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைதி பேரணியில் கட்சியினர் திரளாக கலந்துக் கொள்ளுமாறு சென்னை மாவட்ட திமுக சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.