சென்னையில் ஜனவரி 30ம் தேதி நடைபெறவுள்ள ஒருநாள் இலவச தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாமுக்கு அரசின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்துடன், மாவட்ட தொழில் மையங்கள் இணைந்து நடத்தும் இந்த முகாமில், சுயதொழில் தொடங்க விரும்பும் 18 வயது நிரம்பிய அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதில், சுயதொழில் தொடங்குவது எப்படி? அரசின் உதவிகள் பெறுவது போன்ற பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்படும் என்றும் அப்போது, தொழில் தொடங்க விரும்புவோரின் பெயர்கள் பெறப்பட்டு, அவர்களுக்கு அடுத்த கட்ட பயிற்சி அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.