நேதாஜியின் வாழ்க்கை மற்றும் போராட்டத்தில் இருந்து நாம் பல விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்று குடியரசு துணை தலைவர் வெங்கையாநாயுடு தெரிவித்துள்ளார்.
சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலையை திறந்து வைத்த பின் பேசிய அவர், இந்திய இளைஞர்களுக்கு 21வது நூற்றாண்டில் நேதாஜி வழிகாட்டும் விளக்காக இருப்பார் என்றார்.
நேதாஜியின் வாழ்க்கை, ஒழுக்கத்தில் இருந்த உறுதிப்பாடு, எடுத்துக் கொண்ட முயற்சியில் காட்டிய அர்ப்பணிப்பு, தைரியம் மற்றும் மன உறுதி ஆகியவற்றில் இருந்து இளைஞர்கள் உத்வேகம் பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தேசிய நலனுக்காகவும், சுதந்திரப் போராட்டத்துக்காகவும் வீர சாவர்கர் ஆற்றிய மதிப்பிட முடியாத பங்களிப்பை, துரதிருஷ்டவசமாக சிலர் சிறுமைப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்றும் வெங்கையாநாயுடு தெரிவித்தார்.