சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கோவையை சேர்ந்த ஓட்டுநருக்கு வெற்றிகரமாக இலவச இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் மகேந்திரன் என்பவருக்கு, இதயத்தின் அனைத்து வால்வுகளும் பழுதடைந்த நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு கடந்த 5ம் தேதி சாலை விபத்தில் மூளைச்சாவடைந்த இளைஞரின் இதயம் உள்ளிட்ட உறுப்புகள் தானமாக பெறப்பட்டன.
அன்றைய தினம் இரவே சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சையில், மகேந்திரனுக்கு இளைஞரது இதயம் மாற்றி பொருத்தப்பட்டது. சுமார் 40 லட்ச ரூபாய் மதிப்பிலான அறுவை சிகிச்சை, மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டது.