சென்னையை அடுத்த ஆவடியில் டியூசன் படிக்க வந்த 6 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற கார் ஓட்டுநரையும், அவருக்கு உடந்தையாக இருந்த பள்ளி ஆசிரியையும் போக்சோ சட்டத்தின்கீழ் போலீஸார் கைது செய்தனர்.
ஆவடியைச் சேர்ந்த சிறுமி, அங்குள்ள பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் தனது பள்ளி ஆசிரியை விஜயலட்சுமியிடம் டியூசன் படித்து வந்தார். இந்நிலையில் அந்த சிறுமியிடம் விஜயலட்சுமியின் கணவரும் கார் ஓட்டுநருமான ராஜா என்ற நரேஷ் தவறாக நடக்க முயன்றதாகவும், அதற்கு விஜயலட்சுமி உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் விசாரணை நடத்தி இருவரையும் போக்சோ சட்டத்தின்கீழ் ஆவடி மகளிர் காவல்நிலைய போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.