பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 2 மடங்கு உயர்ந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
பொங்கலை ஒட்டி சென்னையில் இருந்து அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் ஆம்னி பேருந்துகளில் செல்வோரின் எண்ணிக்கை குறையவில்லை. இதனால்
தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 2 மடங்கு உயர்ந்துள்ளது.
சென்னையில் இருந்து நெல்லை, தூத்துக்குடிக்கு வழக்கமான நாட்களில் 800 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும் ஆனால் இப்போது நெல்லைக்கு 1700 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
ஏசி பேருந்துகளில் 1800 ரூபாயும், மெர்சிடஸ் பென்ஸ் சொகுசு பேருந்துகளில் 2,300 ரூபாயும் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.இதேபோல தூத்துக்குடி, திருச்செந்தூருக்கு 1,700 ரூபாயும், நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட ஊர்களுக்கு 2 bஆயிரம் ரூபாய் வரையும் வசூலிக்கப்படுவதாக பயணிகள் கூறியுள்ளனர்.