குறைந்த கட்டணத்தில், சாதாரண மக்களும் பயணிக்கும் வகையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் குளிர்சாதன பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.
ஏற்கனவே இயக்கப்படும் வால்வோ குளிர்சாதன பேருந்துகளில் குறைந்தபட்சக் கட்டணம் 28 ரூபாயாக உள்ள நிலையில், இந்தப் பேருந்துகளில் 15 ரூபாய் அடிப்படை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு முதல் சிறுசேரி வரை 40 கி.மீ தொலைவுக்கு இயக்கப்படும் பேருந்தில் அதிகபட்சமாக 60 ரூபாயும், தாம்பரம் முதல் திருவான்மியூர் வரை இயக்கப்படும் பேருந்தில் அதிகபட்சமாக 45 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதே போல் மேலும் 46 பேருந்துகளும், அவை இயக்கப்பட உள்ள வழித்தடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. பயணிகள் அடுத்த நிறுத்தத்தை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் வகையில் ஒலிபெருக்கி வசதியும் செய்யப்பட்டுள்ளது.