சென்னையில் அடையாளம் காணப்பட்டு, கணக்கெடுக்கப்பட்டுள்ள நடைபாதை வியாபாரிகளின் விவரங்களை மாநகராட்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய, சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், நடைபாதை வியாபாரிகள் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டத்தின்படி, சென்னையில் 15 மண்டலங்களிலும் உள்ள நடைபாதை வியாபாரிகள் கணக்கெடுக்கப்பட்டு, 5-வது மண்டலத்தில், 637 நடைபாதை வியாபாரிகளின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சென்னையில் அடையாளம் காணப்பட்டு, கணக்கெடுக்கப்பட்டுள்ள நடைபாதை வியாபாரிகளின் விவரங்களை மாநகராட்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 10 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.