பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 5-வது நாளாக உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.அது இந்தியாவிலும் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தொடர்ந்து 5-வது நாளாக ந பெட்ரோல், டீசல் இரண்டும் விலை உயர்வை சந்தித்தன.
சென்னையில் நேற்று78 ரூபாய் 48 காசுகளுக்கு விற்பனையான ஒரு லிட்டர் பெட்ரோல், இன்று 16 காசுகள் விலை உயர்ந்து 78 ரூபாய் 64 காசுகளுக்கு விற்பனையானது. இதே போல நேற்று 72 ரூபாய் 39 காசுகளுக்கு விற்பனையான ஒரு லிட்டர் டீசல், இன்று 19 காசுகள் உயர்ந்து 72 ரூபாய் 58 காசுகளுக்கு விற்பனையாகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதாகவும், ஆனால் வினியோகம் பாதிக்கப்படாது என்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள் கூறியுள்ளனர்.