பாதிக்கப்பட்ட மாணவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தது அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தெரியவே தெரியாது என அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் பேட்டியளித்த அவர், இந்த சம்பவத்திற்கு பிறகு பல்கலைக்கழக நிர்வாகிகள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறினார்.
குற்றவாளியின் மனைவி பல்கலைக்கழகத்தில் அடிப்படை பணியாளராக உள்ளதாகவும், சம்பவத்தில் அவருக்கும் பங்கு இருக்கிறதா என்பது விசாரணையில் தான் தெரிய வரும் என்றும் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.