கிரிக்கெட் போட்டிகளில் தனது ஓய்வை அறிவித்த பிறகு சென்னை திரும்பிய அஸ்வினுக்கு மேற்கு மாம்பலத்தில் உள்ள அவரது வீட்டில் பேண்ட் வாத்தியம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் மூன்றாவது போட்டி முடிந்தவுடன் தனது ஓய்வை அறிவித்தார்.
இந்நிலையில் இன்று வீடு திரும்பிய அஸ்வினை அவரது உறவினர்களும், ரசிகர்களும் மலர்தூவியும், மாலை அணிவித்தும் வரவேற்றனர்.