சென்னை, பெருங்குடியில் அரசு வங்கி உதவியுடன் வீட்டுக் கடன் பெற்று தரும் நிறுவனமான கேன் ஃபின் ஹோம்ஸ் மற்றும் L & W என்ற கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
நிதி நிறுவனத்தில் பணப்பரிமாற்றம் தொடர்பாகவும், கட்டுமான நிறுவனத்தில் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாகவும் சோதனை நடப்பதாக கூறப்படுகிறது.
போரூரில் சிங்கப்பூரை சேர்ந்த கெப்பல் நிறுவனத்திற்கு சொந்தமான ஒன் பாராமவுண்ட் ஐடி வளாகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 2 ஆயிரத்து 100 கோடி ரூபாய்க்கு ஐடி வளாகத்தை கெப்பல் நிறுவனம் வாங்கிய நிலையில், அதில் 23 தனியார் ஐடி நிறுவனங்கள் செயல்படுவதாக கூறப்படுகிறது.