மருத்துவர்கள், ஐடி துறையை சேர்ந்தவர்கள் கூட இணைய குற்றங்கள் மூலம் ஏமாறுபவர்களாக இருக்கிறார்கள் என்று சைபர் கிரைம் பிரிவு துணை ஆணையாளர் சரினா பேகம் தெரிவித்தார்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் டிஜிட்டல் பாதுகாப்பு கருத்தரங்க நிகழ்ச்சியில் பேசிய அவர், லண்டனை சேர்ந்த இளம்பெண் என நினைத்து வடமாநில இளைஞரிடம் 6 லட்சம் ரூபாயை IT ஊழியர் ஒருவர் ஏமாந்தது பற்றி விவரித்தார்.