தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கத்தில் தோசை தடிமனாக இல்லை என்று கூறி ஓட்டல் உரிமையாளரை சரிமாரியாக தாக்கிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அண்ணாநகரை சேர்ந்த ராமஜெயம் என்பவரின் ஓட்டலுக்கு நேற்றிரவு வந்த 2 பேர் தோசை மெலிதாகவும், சிறியதாகவும் இருப்பதாகவும் கூறி வாக்குவாதம் செய்ததுடன், மேலும் 2 பேரை அழைத்து வந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில் ராமஜெயத்திற்கு ரத்தகாயம் ஏற்பட்ட நிலையில் வீடியோ ஆதாரத்துடன் அவர் போலீசில் புகார் அளித்தார்.