சென்னை தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் மது போதையில் காரை தாறுமாறாக ஓட்டி, மற்ற வாகனங்கள் மீது மோதியதாகக் கூறப்படும் 3 பேர் கொண்ட கும்பலால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், கேள்வி எழுப்பிய சக வாகன ஓட்டிகளிடம் அவர்கள் வாக்குவாதம் செய்தனர்.
தகவலறிந்து போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் சென்றபோது, தாங்கள் வழக்கறிஞர்கள் என்று கூறி அவர்களுடனும் வாக்குவாதம் செய்தனர்.
நீண்ட நேரமாகியும் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் அவர்கள் பிடிவாதம் பிடித்ததால், மூவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.