தாம்பரம் அருகே பல்லாவரத்தில் சுகாதாரமற்ற குடிநீர் குடித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழந்த நிலையில் 23 பேர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையிலும் பல்லாவரம் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து நலம் விசாரித்த அமைச்சர் தாமோ அன்பரசன், குடிநீரால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் மீன்களை பிடித்து சாப்பிட்டதால் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறினார்.
அதற்கு செய்தியாளர்கள் அமைச்சரிடம், சுகாதாரமற்ற குடிநீரை பருகியதால்தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுவதாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளிக்காத அமைச்சர் தாமோ அன்பரசன், செய்தியாளர்களை நோக்கி கேள்வி எழுப்பினார்.