சுற்றிலும் குடியிருப்புகளுக்கு மத்தியில் தன் வீட்டின் அருகே உள்ள நிலத்திலும்,வீட்டின் மொட்டை மாடியிலும் பல்வேறு வகையான மூலிகை செடிகள்,பழ மர வகைகளை வளர்த்து வருகிறார் சென்னை முகப்பேரில் வசிக்கும் பஞ்சாபை பூர்வீகமாக கொண்ட ஜஸ்வந்த் சிங்...
இயற்கையின் மீது கொண்ட ஆர்வத்தினாலும் சென்னையிலும் இயற்கையின் சூழலில் வாழ முடியும் என்பதை நிரூபிக்கவும் 35 ஆண்டுகளாக மர,செடிகளை வளர்த்து வருவதாக கூறுகிறார்...
வீட்டின் அருகே உள்ள நிலத்தில் 22 ஆண்டுகளாக சிகப்பு சந்தனம் (Red sandalwood), வெள்ளை சந்தனம் (White Sandalwood) என 80 க்கும் மேற்பட்ட சந்தன மரங்களை வளர்த்து வருகிறார்...
ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம்,சிகப்பு சோற்று கற்றாலை,தூதுவளை,கற்பூரம்,நெல்லி,குங்குமம்,லிப்ஸ்டிக் மரம்,குறிஞ்சி,திருவோடு செடி,தில்லை மரம் என 300 க்கும் மேற்பட்ட அரியவகை தாவரங்கள்,மூலிகை செடிகளை வளர்த்து பராமரித்து வருகிறார்...
20 பேர் வரை அமரும் வகையில் எந்தவித எக்ஸ்ட்ரா சப்போர்ட்ம் இல்லாமல் மாமரத்தில் மர வீடு கட்டியுள்ள ஜஸ்வந்த்,புங்கை,புன்னை,வாகை,தென்னை,சவுக்கு என பல்வேறு மரங்களையும் வீட்டின் மொட்டை மாடியில் வளர்த்து வருகிறார்...
ப்ளூ பெரி,பிளாக் பெரி என வெளிநாட்டில் அதிகமாக வளரும் பழ மரங்கள் முதல் கொய்யா, சீதா,சப்போட்டா,நாவல்,அதிசய பழம்,ஸ்டார் ப்ரூட்,மர ஆப்பிள் என 30க்கும் மேற்பட்ட பழ மரங்களை வீட்டின் மாடியில் வளர்க்கிறார்...
மாடியில் தேனீ வளர்த்து தனக்கு தேவையான தேனை எடுத்துக்கொள்ளும் ஜஸ்வந்த் சிங்,பயோ கேஸ் மூலம் வீட்டிற்கு தேவையான கேஸ்,மற்றும் சோலார் மூலம் வீட்டிற்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்துகொள்கிறார்...