செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சென்னை

வெறும் கையால் தோண்டியதால் சிமெண்டு தரையில் விழுந்த ஓட்டை.. அதிர்ச்சியில் மக்கள் போராட்டம்..! இந்த வீட்டுல நீங்க குடியிருப்பீங்களா..?

Oct 24, 2024 09:27:22 PM

சென்னை வண்ணாரப்பேட்டை மூலகொத்தளம் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்ட 11 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் தரமற்ற முறையில் இருப்பதாக குற்றஞ்சாட்டிய மக்கள் குடியிருப்பு முன்பு போராட்டத்தில் குதித்தனர்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சென்னை, மூலகொத்தளத்தில் புதிதாக கட்டப்பட்ட 11 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடடத்தின் 4 வது மாடி தரை தளத்தில் வெறும் கையால் தோண்டினால் சிமெண்டு பூச்சு மணல் போல வரும் காட்சிகள் தான் இவை..!

2018 ஆம் ஆண்டு அப்போதைய அமைச்சர் ஜெயக்குமாரால் அடிக்கல் நாட்டப்பட்டு, 2020 ஆம் ஆண்டு கட்டிடப் பணிகள் முடிக்கப்பட்டாலும், 2 ஆண்டுகள் பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் கிடந்த 1044 குடியிருப்புகளை
அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சன்சேடு இல்லாமல் ஜன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளதால் கனமழையின் போது அனைத்து தளங்களில் உள்ள வீடுகளுக்குள்ளும் மழை நீர் தேங்கி உள்ளதாக அங்கு குயிருக்கும் பெண்கள் புகார் தெரிவிக்கின்றனர்

மேல் மாடி வரை தண்ணீர் ஏறுவதில்லை என்றும் சில வீடுகளில் ஜன்னல்களும், பாத்ரூம் உபகரணங்களும் பெயர்ந்து கையோடு வந்து விட்டதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்

காலையில் ஒருமணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் மட்டுமே லிபட் இயக்கப்படுவதாகவும் மற்ற நேரங்களில் 11 மாடிகளையும் படி வழியாகவே ஏறி கடக்க வேண்டி இருப்பதால கடுமையாக அவதியுறுவதாக வேதனை தெரிவித்தனர்

தரமற்ற கட்டுமானத்தை கண்டித்து கம்யூனிஸ்ட்டு இயக்கத்தினர் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த நிலையில் ,குடியிருப்பு முன்பு கூடிய மக்களை அதிகாரிகளும் போலீசாரும் சமாதானப்படுத்தினர்

கட்டுமானத்தை விரைந்து சரி செய்து தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.


Advertisement
தாம்பரம் அருகே, சாலைகளில் சுற்றித் திரிந்த 76 மாடுகள் பறிமுதல் - உயிரிமையாளருக்கு அபராதம் விதிப்பு..
சென்னை சின்ன போரூர் பகுதியில் திடீரென 5 அடிக்கு உள்வாங்கிய சாலை..
பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களை AI கேமரா மூலம் கண்காணிக்க மாநகராட்சி முடிவு..
வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது..
ரேபிடோ கார் ஓட்டுநரைத் தாக்கிய கணவன், மனைவி கைது..
மருதுபாண்டியர் நினைவுதினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள திருவுருவ சிலைகளுக்கு அமைச்சர்கள் மரியாதை..
வேளச்சேரி ரயில் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் - மதுபோதையில் மிரட்டல் விடுத்த நபரிடம் விசாரணை
மெரினா கடற்கரைக்கு நீலக் கொடி சான்றிதழ்... டெண்டர் கோரிய சென்னை மாநகராட்சி
குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை வெளியிட்ட இர்பானிடம் காவல்துறை விசாரணை
சென்னை, எம்.கே.பி. நகரில் ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய அரசுப்பேருந்து

Advertisement
Posted Oct 23, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

திருச்செந்தூரில் கஞ்சா அசுரர்களால் “கண்பார்வை கேள்விக்குறியானது".. இளைஞரின் சகோதரி கண்ணீர்..! போலீசாரின் இரும்புக்கரம் பாயுமா ?

Posted Oct 23, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒரு மணி நேர மழைக்கே ஊருக்குள் வெள்ளம்.. “காருக்குள் இருந்து பார்த்தால் என்ன தெரியும் ?” எம்.எல்.ஏவிடம் பெண்கள் கடும் வாக்குவாதம்..!

Posted Oct 20, 2024 in சென்னை,Big Stories,

தாறுமாறாக சாலையில் ஓடி விபத்தை ஏற்படுத்திய கார்.! 5 வாகனங்கள் மீது மோதி விபத்து.. சாப்பிடாமல் கார் ஓட்டியதால் விபத்து நடந்துவிட்டதாக ஓட்டுநர் பதில்.!

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்

Posted Oct 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அழுகிய முட்டையில் கேக்குகள்.. கடை கடையாக சப்ளையாம் ..! கேக் பிரியர்களே உஷார்...! 8000 அழுகிய முட்டைகள் பறிமுதல்


Advertisement