செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அந்த மனசு தான் சார் “கடவுள்” உயிரை பணயம் வைத்து பத்திரமாய் மீட்ட வல்லவர்கள்..! மின்சாரம் தாக்கி குருக்கள் தப்பியது எப்படி ?

Oct 17, 2024 08:30:50 PM

சென்னை புழல் அருகே மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய கோவில் குருக்களை, இருவர் சமயோசிதமாக மீட்டு உயிரை காத்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது 

சென்னை புழல் வள்ளுவர் நகரில் குபேர விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் பூசாரி வழக்கம் போல பூஜைகளை செய்திடுவதற்காக தமது இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு வந்தார். புழல் சுற்றுவட்டார பகுதியில் கொட்டிய கனமழை காரணமாக கோவிலை சுற்றி மழை நீர் தேங்கி இருந்தது.

பூசாரி வாகனத்தில் இருந்து இறங்கி தேங்கி நின்ற தண்ணீரில் இறங்கி பூஜை செய்வதற்காக கோவிலின் இரும்பு கேட்டை திறக்க முற்பட்டார். பூசாரி கேட்டை தொட்டதும் அவரின் மீது மின்சாரம் பாய்ந்து அப்படியே மயங்கினார்

அதனை கண்ட அப்பகுதி பெண் ஒருவர் கூச்சலிட்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர், இளைஞர் ஒருவர் தண்ணீரில் இறங்கி சிறிய கம்பால் பூசாரியை கேட்டில் இருந்து தட்டி விட முயன்றார், அவர் மீது சற்றும் மின்சாரம் பாய்ந்ததால் நூழிலையில் தப்பினார்

மற்றொருவர் ஈரமில்லாத பெரிய கம்பு ஒன்றை எடுத்து வந்து இரும்பு கேட்டில் சிக்கி இருந்த பூசாரியின் கையை தட்டி விட்டார், உடனடியாக அருகில் நின்ற இளைஞர், தண்ணீரில் விழுந்த பூசாரியை, சட்டையை பிடித்து இழுத்து வெளியே இழுத்தார்

தொடர்ந்து அவரது நெஞ்சில் கையைத்து அழுத்தி சிபிஆர் சிகிச்சை கொடுத்தனர், வாயில் வாய் வைத்து மூச்சு காற்றையும் கொடுத்து பூசாரியின் உயிரை காப்பாற்றினர்

தொடர்ந்து பூசாரியை மருத்துவமனைக்கு ஆழைத்துச் சென்று முதல் உதவி சிகிச்சை அளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் உயிருக்கு போராடிய பூசாரியை சமயோஜிதமாக செயல்பட்டு மீட்ட அந்த இருவருக்கும் பாராட்டுக்குள் குவிந்து வருகின்றது.


Advertisement
பிளீச்சிங் பவுடருக்கு பதில் மைதா மாவை வீதியில் தூவிய விசித்திர.. விஞ்ஞான.. மாநகராட்சி..! கேள்விப்பட்ட அமைச்சர் சொன்னது என்ன ?
சென்னை மெரினா கடற்கரையில், எச்சரிக்கையை மீறி குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் உயிரிழப்பு
சென்னை, மணலிப்புதுநகரில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழை நீர் வடியவில்லை என புகார்
சென்னை கிண்டி குதிரை பந்தய மைதானத்தில் 421 அடி ஆழத்தில் 30,000 கன அடி மழைநீரை சேமிக்கும் 4 குளங்கள்
சென்னை அருகே பல அடி ஆழம் உள் வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பின் பார்க்கிங்
சென்னை சேப்பாக்கத்தில் மழைநீர் வடிகால் பணி தொடர்பாக இ.பி.எஸ் கேள்விக்கு உதயநிதி பதில்
பள்ளிக்கரணையில் ஒக்கியம் மடுவு 6 கண் பாதையானதால் வேகமாக வடியும் வெள்ளநீர்
வெள்ளநீர் வெளியேற அகலப்படுத்தப்பட்டு வரும் பள்ளிக்கரணை கால்வாய் கரைகள்
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
சென்னை மழை நீரில் சிக்கி நடுவழியில் நின்ற பி.எம்.டபிள்யூ, ஆடி சொகுசு கார்கள்

Advertisement
Posted Oct 17, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பிளீச்சிங் பவுடருக்கு பதில் மைதா மாவை வீதியில் தூவிய விசித்திர.. விஞ்ஞான.. மாநகராட்சி..! கேள்விப்பட்ட அமைச்சர் சொன்னது என்ன ?

Posted Oct 17, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

மாமூல் ரவுடிகள் அட்டூழியம் கடைக்காரர் மண்டை உடைப்பு ஓசி சிகரெட் கேட்டு தாக்குதல்..! நீதி கேட்டு ஆளுநர் மாளிகை முற்றுகை

Posted Oct 14, 2024 in தமிழ்நாடு,Big Stories,

தமிழகத்தை உலுக்கிய 13 ஏகாதசி கொலைகள்..! வேட்டையனாய் துப்பறிந்த டி.எஸ்பி..! ஒரு நிஜ கிரைம் திரில்லர்

Posted Oct 12, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா?.. மனித தவறு விபத்துக்கு காரணமா?.. உயர்மட்டக்குழு தீவிர விசாரணை

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் 90 கி.மீ.வேகத்தில் மோதிய எக்ஸ்பிரஸ் தடம் புரண்டன 6 பெட்டிகள்


Advertisement