செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சென்னை

fake ப்ரியாவை நம்பி ஏமாந்த அந்த 200 பேர் ரூ 2,00,000 போச்சிப்பா..! என்னம்மா.. இப்படி பன்றீங்களேம்மா...

Oct 09, 2024 06:55:01 AM

இன்ஸ்டாகிராமில்  ரீல்ஸ் செய்யும் இளம் பெண்களின் புகைப்படத்தை பயன்படுத்தி, வாய்ஸ் சேன்ஞ்சர் செயலி மூலம் பெண் குரலில் பேசி வீடியோகால் வருவதாக பலரை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்

டிரெண்டிங் பாடலுக்கு தங்களை கிளாமராக காண்பித்து ரீல்ஸ் செய்வதை சில மாடர்ன் மங்கையர் மாமூலாக்கி வருகின்றனர்.

அந்தவகையில் ரீல்ஸ் பெண்களிடம் படத்தை காண்பித்து, வாய்ஸ் சேஞ்சர் செயலி மூலம் பெண்குரலில் பேசி 200 பேரை ஏமாற்றி பணம் பறித்ததாக கைதான “மன்மத” கிருஷ்ணன் இவர் தான்..!

சென்னையில் நிகழ்ச்சி ஏற்பட்டாளராக உள்ள இளம் பெண் ஒருவர் மேற்கு மண்டல சைபர் குற்றபிரிவு போலீசில் புகார் ஒன்றை அளித்தார் . அதில் தனது புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு தன்னை பாலியல் தொழிலாளி போல சித்தரித்து உள்ளதாகவும், தன்னுடன் பேச 800 ரூபாய் என்றும்.. வீடியோ காலில் பார்க்க 3000 ரூபாய் எனவும்... நேரில் சந்திக்க 8 ஆயிரம் ரூபாய் எனவும்..! விளம்பரப்படுத்தி இருப்பதாக புகாரில் தெரிவித்திருந்தார்

இதையடுத்து அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்ட ஐ.டியில் சாட்டிங் செய்து கூகுல் பே நம்பரை பெற்று சம்பந்தப்பட்ட நபரின் செல்போனை கண்டறிந்த போலீசார், புதுச்சேரி நகைக்கடையில் வேலைபார்த்து வந்த கிருஷ்ணன் என்ற இளைஞரை சுற்றி வளைத்தனர்.

விசாரணையில், வாய்ஸ் சேஞ்சர் செயலி மூலம் பெண் குரலில் பேசியதால் தன்னை நம்பி பல ஆண்கள் பணம் அனுபியதை ஒப்புக் கொண்ட கிருஷ்ணன், அவர்களிடம் ஏமாற்றி பணத்தை பெற்றுக் கொண்டதும் அவர்களின் செல்போன் எண்ணை பிளாக் செய்து விடுவேன், ஏமாற்றப்பட்டவர்களும் அவமானத்துக்கு பயந்து இதனை வெளியில் சொல்லமாட்டார்கள் என்று கூறி உள்ளார். 200க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து 800 ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை வாங்கி இருப்பதாகவும், இதுவரை 2 லட்சம் ரூபாய்க்கு மேல் வசூலித்து அந்த பணத்தை உல்லாசமாக செலவு செய்ததாகவும் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணன் , பெண்களின் பெயரில் ஏராளமான போலியான முக நூல் மற்றும் இன்ஸ்டாகிராம் ஐடிக்களை உருவாக்கி இயங்கி வந்ததையும் போலீசார் கண்டு பிடித்துள்ளனர். கிருஷ்ணனை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Advertisement
சென்னையில் 18 ஆண்டு கால சட்டப்போராட்டத்திற்கு பிறகு ரூ.50 கோடி நிலத்தை மீட்டெடுத்த நடிகர் கவுண்டமணி
ஹீரோயிசம் காட்டுவது தீங்கானதென மாணவர்கள் உணர வேண்டும் - ரமேஷ் ரயில்வே டி.எஸ்.பி.
விமானப்படையின் 92 ஆவது ஆண்டு விழா... விமானங்கள், ஹெலிகாப்டர்கள் வான் சாகசத்தோடு நிறைவு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
அரசு நிகழ்ச்சியில் உதயநிதி டி-சர்ட் அணிவது குறித்து அ.தி.மு.க. விமர்சனம்
பூசுண மாதிரியும்.. பூசாத மாதிரியும்.. 5 பேர் பலி - உளவுத்துறை சொல்லும் 8 முக்கிய காரணங்களை பாருங்கள்..!
சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் உள்ள மீன் கடைகள் மாநகராட்சி அகற்றம்
தேச பெருமையை பறைசாற்றும் நிகழ்ச்சியில் மக்களை துணை முதலமைச்சர் காக்காதது ஏன் : தமிழிசை கேள்வி
5 பேர் உயிரிழப்பு உள்துறை செயலாளர் போட்ட அதிரடி உத்தரவு..! யாரெல்லாம் சிக்குவார்கள் ?
பன்றி வளர்ப்பு கொள்கைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி

Advertisement
Posted Oct 09, 2024 in தமிழ்நாடு,Big Stories,

பள்ளிக்கு சைக்கிளில் சென்ற 7 ஆம் வகுப்பு மாணவர் கால்வாயில் விழுந்து பலி..! ஆற்றில் இருந்து சடலம் மீட்பு

Posted Oct 09, 2024 in இந்தியா,Big Stories,

ஜம்மு-காஷ்மீரில் கூட்டணி ஆட்சி பள்ளத்தாக்கில் சரிந்த காங்கிரஸ் 2வது பெரிய கட்சியான பா.ஜ.க காஷ்மீர் ஆப்பிளை ருசிக்கத் தவறிய காங்கிரஸ் ஜம்முவில் மீண்டும் சாதித்த பா.ஜ.க

Posted Oct 08, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

விவாகரத்து கேட்ட மனைவி கொன்று புதைத்த கணவன் நிர்க்கதியான பெண் குழந்தைகள்!

Posted Oct 08, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

“மன்மதன்” சிம்புவுக்கே டஃப் கொடுத்த கேடி லேடி “பவுடர் ஜமீமா”..! வசதியான பசங்கன்னா “கிட்னாப்”..!

Posted Oct 07, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பூசுண மாதிரியும்.. பூசாத மாதிரியும்.. 5 பேர் பலி - உளவுத்துறை சொல்லும் 8 முக்கிய காரணங்களை பாருங்கள்..!


Advertisement