செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சாலை தரமாக இருந்தால் என்னை தூக்கிலிடுங்கள் திமுக கவுன்சிலர் ஆவேசம்..! வேலையை விட்டே செல்கிறேன் - அதிகாரி

Sep 26, 2024 09:15:57 AM

திருவொற்றியூர் நெய்தல் நகரில் மழை பெய்த அரை மணி நேரத்தில் தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட சாலைப்பணிகளை தடுத்து நிறுத்திய கவுன்சிலர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த அதிகாரி ஒருவர் , உதவி ஆணையரின் ஆய்வின் போது முன்னுக்குப்பின் முரணாக பேசி சிக்கிக்கொண்டதால் , தான் வேலையை விட்டே போகிறேன் என்று கதறும் நிலைக்கு தள்ளப்பட்டார்

பெருநகர சென்னை மாநகராட்சி 1-வது மண்டலத்துக்கு உட்பட்ட திருவொற்றியூர் விம்கோ நகர் நெய்தல் நகர் பகுதியில் கடந்த 19ஆம் தேதி அதிகாலை முதலிலே மழை பெய்து வந்த நிலையில் 7:30 மணி வரை மழை பெய்து ஓய்ந்தது . காலை 8 மணி அளவில் அங்கு புதிய சாலை அமைக்க பணி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது

அப்பகுதி மக்களின் அழைப்பின் பேரில் அங்கு வந்த 5 வார்டு திமுக கவுன்சிலர் சொக்கலிங்கம், மழை பெய்து வரும் நிலையில் எதற்காக தரமற்ற முறையில் சாலை அமைக்கும் பணியை செய்தீர்கள் என மாநகராட்சி உதவி பொறியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனையும் மீறி 25 மீட்டர் வரை புதிய சாலையை அமைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. மண்டல குழு கூட்டத்தில் இது குறித்து பேசிய கவுன்சிலர் சொக்கலிங்கம் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினார்.

மழை நேரத்தில் போடப்பட்ட சாலையின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் சாலை தரமாக இல்லை என்றால் உடனடியாக சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர் மீதும் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் பாபு, உதவி பொறியாளர் பாபு,
மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் . சாலை தரமாக இருந்தால் எனக்கு தூக்கு தண்டனை கூட கொடுங்கள் என்றும் ஆவேசமாக பேசினார்.

இதனை அடுத்து புதிதாக சாலை போடப்பட்ட இடத்தை திருவொற்றியூர் மாநகராட்சி மண்டல உதவி ஆணையர் சுரேஷ் , மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் பாபுவுடன் வந்து சாலையைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் . அப்போது சாலை அமைக்க அனுமதி கொடுத்த உதவி செயற்பொறியாளர் பாபு , இனி சாலை போடும் இடத்திற்கே நான் வரமாட்டேன் வேலையை ராஜினாமா செய்யப் போகிறேன் என்று கூறிவிட்டு வெளியேறினார்

பின்னர் அவரை சமாதானப் படுத்திய உதவிய ஆணையர் சுரேஷ் 14 வார்டுகளிலும் பணிகளை பார்வையிட வேண்டும் என்றால் நான் ரோபோ ரஜினி ஆக தான் இருக்க வேண்டும் என நகைச்சுவையாக பேசினார் . பின்னர் சாலையின் தரத்தை ஆய்வு செய்வதற்கென்று மாநகராட்சி குழு இருப்பதாகவும் அவர்களுக்கு தகவல் அளித்து சாலையை தரமாக இருக்கிறதா என்று ஆய்வு செய்வதாக உறுதியளித்தார்

கோபமாக இருந்த கவுன்சிலர் சொக்கலிங்கத்தை, கூல் செய்வதற்காக நான் கலெக்டராக வரும் பொழுது நீங்கள் சட்டமன்ற உறுப்பினராகவோ, அமைச்சராகவோ இருப்பீர்கள் என்று கூறி சமாதானப்படுத்தினார்


Advertisement
சென்னை உயர்நீதிமன்ற 34ஆவது தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்பு
மழை நீர் மேலே.. தார்ச்சாலை என்ன ஒரு புத்திசாலி தனம்.. உத்தரவுக்கு கீழ்படிகிறார்களாம்..! தரமற்ற சாலைப் பணிக்கு மக்கள் எதிர்ப்பு
நான் ஆம்பளடா.. அடாவடி ஆட்டோ ஓட்டுனரை பிடித்து அடக்கிய அந்த இரு பெண்கள் ..! போக்குவரத்து ஊழியர்களுக்கு அடி உதை
ஆஸ்திரேலியாவுக்கு கடத்தவிருந்த 112 கிலோ சூடோ எபிட்ரின் பறிமுதல்
சென்னை அருகே பித்தளை சிலைகளை ஐம்பொன் சிலை எனக் கூறி விற்க முயன்ற ரவுடி உள்பட 3 பேர் கைது
செந்தில்பாலாஜி மீண்டும் அமைச்சர் ஆவதற்கு எந்தத் தடையும் இல்லை: ஆர்.எஸ். பாரதி
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன்
குடல் மருத்துவ கருத்தரங்கில் பார் டான்சரின் நடனம் திறமை காட்டிய மருத்துவர்கள்
சென்னையில் சார்பதிவாளர்கள் குறித்து அவதூறு கருத்துகள் பதிவிட்ட யூடியூபர் மீது குண்டர் சட்டத்தில் கைது
தேசிய விருது பெற்ற பிரபல இசையமைப்பாளர் மீது மனைவி நகை மோசடி புகார்

Advertisement
Posted Sep 27, 2024 in சென்னை,Big Stories,

மழை நீர் மேலே.. தார்ச்சாலை என்ன ஒரு புத்திசாலி தனம்.. உத்தரவுக்கு கீழ்படிகிறார்களாம்..! தரமற்ற சாலைப் பணிக்கு மக்கள் எதிர்ப்பு

Posted Sep 27, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நான் ஆம்பளடா.. அடாவடி ஆட்டோ ஓட்டுனரை பிடித்து அடக்கிய அந்த இரு பெண்கள் ..! போக்குவரத்து ஊழியர்களுக்கு அடி உதை

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மசாஜ் சென்டரில் ரெய்டு... சிலாப்பில் பதுங்கிய பெண்கள் ஒரு பெண் மட்டும் குதித்தது ஏன்..?...ரெய்டு காட்சிகளை வெளியிட்ட போலீஸ்

Posted Sep 26, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

குடல் மருத்துவ கருத்தரங்கில் பார் டான்சரின் நடனம் திறமை காட்டிய மருத்துவர்கள்

Posted Sep 26, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

உதட்டில் லிப்ஸ்டிக் பூசியது தப்பா ? குமுறும் முதல் பெண் டபேதார்..!


Advertisement