சென்னை ராயபுரம் பகுதியில், கடந்த 22ஆம் தேதி, இருசக்கர வாகனத்தில் வேகமாகச்சென்று கீழே விழுந்த காதலர்களுக்கு உதவிய போக்குவரத்து காவலரை கீழே தள்ளிவிட்டு காதலியை அங்கேயே விட்டுத் தப்பியோடிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். பெட்ரால் குண்டு வீசிய வழக்கு உட்பட 6 வழக்குகளில் தொடர்புள்ள தன்னை போலீசார் பிடித்துவிடுவார்கள் என்று கருதிய தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ஹரிஷ் குமார் தப்பியோடியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.